For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.
Pillaiyar patti kovil

??????????????? ?????????? ??????



Description


Pillaiyarpatti Karpaga Vinayagar temple was built by early Pandyas. Karpaga Vinayagar is carved out in a cave of Pillaiyarpatti Hillocks. Thiruveesar (Shiva) is also carved in the rock of this cave.There are 14 stone Sculptures in the cave (dated from 400 to 1038 AD). These stone sculptures state the ancient names of Pillaiyarpatti such as Ekkattoor, Thiruveenkaikkudi, Maruthangudi, and Rajanarayanapuram. The image of Pillaiyarpatti Pillaiyar and that of a Siva Lingam were carved out of a stone by a sculptor named Ekkattur Koon Peruparanan who put his signature on a stone inscription, in Tamil Language used between the 2nd and 5th century, found even today in the sanctum. It is believed that the icon of Pillaiyarpatti Pillaiyar must have been carved around the 4th century AD


History


தல வரலாறு


குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில். பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

Our Sponsers

No Sponsers Photo !

Top Mobile Apps
Mobile Apps